இந்தியா அபார பந்துவீச்சு: 4 முக்கிய விக்கெட்டுக்களை இழந்த இலங்கை!

ஞாயிறு, 18 ஜூலை 2021 (17:34 IST)
இந்தியா அபார பந்துவீச்சு: 4 முக்கிய விக்கெட்டுக்களை இழந்த இலங்கை!
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது என்பதும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் சற்று முன்னர் இலங்கை அணி 35 ஓவர்களில் நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது என்பதும் அந்த அணி சற்றுமுன் வரை 150 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது 
 
இலங்கை அணியின் பெர்னாண்டோ, மினோத், பானுகா மற்றும் தனஞ்செயா ஆகிய 4 விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்டது என்பதும் குல்தீப் யாதவ் ஆகிய இரண்டு விக்கெட்டுகளையும் சாஹல் மற்றும் க்ருணால் பாண்டியா தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது களத்தில் சாரித் அசலங்கா மற்றும் கேப்டன் தசன் ஷங்கா ஆகிய இருவரும் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து உள்ளது என்பதும் இந்த அணி வெற்றியுடன் திரும்பி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்