இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு.. தொடர் தோல்வி எதிரொலியா?

திங்கள், 6 நவம்பர் 2023 (11:06 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி தொடர் தோல்வியை சந்தித்து வருவதை அடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
 இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அந்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் ரோஷன் ரணசங்க அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால தலைவராக அர்ஜுனா ரணதுங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் இடைக்கால கிரிக்கெட் வாரியத்தில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏழு பேர் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.  
 
இலங்கை கிரிக்கெட் அணி  தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அந்த அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இலங்கை அணி இழந்ததை அடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்