ஓவல் டெஸ்ட்டை 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலைப் பெற்று தொடரை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது. ஓவல் டெஸ்ட்டின் ஆரம்பத்தில் மோசமாக விளையாடினாலும் பின்னர் சுதாரித்து விஸ்வரூபம் எடுத்து வெற்றியைக் கைப்பற்றியது. ஓவலில் 50 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய கேப்டன் கோலி மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் தூக்கி எறியப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆஸி அணியின் முன்னாள் ஜாம்பவான் பவுலர் ஷேன் வார்ன் கோலி வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார். அவர் மேல் அணி வீரர்கள் மரியாதை வைத்துள்ளனர். அவருக்காகவே சிறப்பாக விளையாடுகின்றனர். ஆஸ்திரேலியா சென்றாலும் வெல்வோம், இங்கிலாந்திலும் வெல்வோம் என்று சொல்பவர் கோலி. கோலி எனும் சூப்பர் ஸ்டாரை இந்திய அணி பெற்றுள்ளது. எனக் கூறியுள்ளார்.