இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: பாகிஸ்தான் 179 ரன்கள் முன்னிலை

சனி, 26 மே 2018 (17:17 IST)
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
பாகிஸ்தான் அணியின் அப்பாஸ் மற்றும் அமீர்ரின் சிறப்பான பந்துவீச்சாள் இங்கிலாந்து அணி 58 ஓவர்களில் 184 ரன்களை எடுத்து அனைத்து வீக்கெட்டுகளையும் இழந்தது. அதிகப்பட்சமாக குக் 70 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி சார்பில் அப்பாஸ் மற்றும் அமீர் 4 வீக்கெட்டுகளை கைப்பற்றினர். 
 
இதன் பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிதானமாக விளையாடி 363 ரன்களை குவித்து அனைத்து வீக்கெட்டுகளையும் இழந்தது. அதிகப்பட்சமாக பாபர் அசாம் 68 ரன்களை எடுத்தார். இதன்மூலம் இங்கிலாந்தை விட பாகிஸ்தான் அணி 179 ரன்கள் முன்னிலை பெற்றது.
 
இந்நிலையில் போட்டியின் மூன்றாவது நாளான இன்று இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இங்கிலாந்து அணி 1 வீக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்துள்ளது. ரூட் 15 ரன்களுடனும், ஸ்டோன்மேன் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி 153 ரன்கள் பின் தங்கி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்