கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி நடக்க இருந்த ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அதற்கு மறுநாளே ஐபிஎல் போட்டி நடத்துவது என்பது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது. அப்படியே நடத்த முயற்சி செய்தாலும் வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு வர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பிசிசிஐ தலைவரான் கங்குலி அளித்த நேர்காணல் ஒன்றில் ‘இப்போது இருக்கும் நிலைமையில் எப்படி வெளிநாடுகளில் இருந்து வீரர்களை அழைத்து வருவீர்கள். மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் வரை இப்படிதான் நிலைமை இருக்கும். இந்த நேரம் உலகின் எந்தவொரு விளையாட்டுக்கும் சாதகமானதாக இல்லை. ஐபிஎல்லை மறந்துவிடுங்கள். பிசிசிஐ பொறுப்பாளர்களுடன் ஆலோசித்த பிறகுதான் இதுபற்றிக் கூற முடியும்’ எனக் கூறியுள்ளார்.