ரன் அவுட்டுக்குப் பிறகு கோலியின் அமைதி என்னை ஆச்சர்யப்படுத்தியது – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து!

வெள்ளி, 18 டிசம்பர் 2020 (11:35 IST)
நேற்றைய போட்டியில் இந்திய கேப்டன் கோலியை அஜிங்க்யா ரஹானே தவறான் வழிகாட்டலால் ரன் அவுட் ஆக்கினார்.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான சுற்றுப்பயண ஆட்டம் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. முன்னதாக ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவும், டி20 போட்டியில் இந்தியாவும் வென்ற நிலையில் நேற்று முதல்  டெஸ்ட் போட்டி தொடங்கி நடந்து வருகிறது. இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய வீரர்கள் அனைவரும் சொதப்ப கோலி மற்றும் ரஹானே அணியை சரிவில் இருந்து காக்கும் விதமாக நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்தனர்.

ஆனால் கோலி 74 ரன்கள் சேர்த்திருந்த போது ரஹானே செய்த தவறால் ரன் அவுட் ஆகி வெளியேறினார். வழக்கமாக கோலி இதுபோல ரன் அவுட் ஆனால் மறுமுனை வீரரைக் கோபமாக பார்ப்பார் அல்லது திட்டுவார். ஆனால் இம்முறை வருத்தத்தோடு நடையைக் கட்டினார். இதுகுறித்து வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் ‘அந்த ஷாட்டில் ரன் எடுக்கவே முடியாது. இருந்தாலும் கோலி ரஹானே அழைத்ததால் ஓடினார். ஆனால் ரஹானே பின் வாங்கினார். இதனால் கோலி அவுட் ஆனார். ஆனால் அவர் ரஹானே மீது கோபத்தை வெளிப்படுத்தாதது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்