குருவின் உடலை தோலில் சுமந்த சிஷ்யன்: நெகிழ வைக்கும் சச்சின்!

வியாழன், 3 ஜனவரி 2019 (16:04 IST)
இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கரில் சிறுவயது பயிற்சியாளர் ராமகாந்த் ஆச்ரேகர் நேற்று காலமானார். 
 
இவர் சச்சின் மட்டுமின்றி வினோத் காம்ப்ளி, சந்திரகாந்த் பண்டிட், சஞ்சய் பாங்கர், பிரவீன் ஆம்ரே, ரமேஷ் பவார், அஜித் அகர்கர்  ஆகியோருக்கு சரியான பயிற்சி அளித்து அவர்களுடைய திறமையை வெளியே கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தவர்.
 
கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி இருந்த ராமகாந்த் நேற்று மரணமடைந்தார். இன்று அவருக்கு இறுதி சடங்கு நடைபெற்றது. அப்போது, ஆச்ரேகர் உடல் வைக்கப்பட்ட ஸ்ட்ரக்ச்சரை சச்சின் தனது தோளில் சுமந்து சென்று இறுதி மரியாதை செய்தார். 
 
சச்சினின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு வாழ்க்கை அமைத்து கொடுத்த குருவிற்கு சச்சின் மட்டுமின்றி வினோத் காம்ப்ளியும் மரியாதை செலுத்தினார். 
 
கடந்த 2010 ஆம் ஆண்டு துரோணாச்சாரியர் விருதும் அதே ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் பெற்றவர் ராமகாந்த் ஆச்ரேகர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்