சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் சச்சின்… சமையலிலும் நான் மாஸ்டர்!

வெள்ளி, 9 ஜூலை 2021 (17:49 IST)
இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் சமைக்கும் புதிய வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்திய அணியின் லிட்டில் மாஸ்டர் என புகழப்பட்ட சச்சின் டெண்டுல்கர் 2013 ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். அதன் பின்னர் அவ்வப்போது அவர் கிரிக்கெட் சம்மந்தமான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதோடு சரி. ஆனால் அவரின் சமூகவலைதளப் பக்கம் மூலமாக வீடியோக்கள் அவ்வப்போது வெளியிடுவார்.

இந்நிலையில் இப்போது சச்சின் தனது சமையலறையில் சமைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இதுபோல பல வீடியோக்களை அவர் வெளியிட்டு இருந்தாலும் இந்த வீடியோவில் அவர் சால்ட் அண்ட் பெப்பர் தாடியுடன் இருக்கும் கெட்டப் அனைவரையும் கவர்ந்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்