கரூர் அருகே மண்மங்கலம் புதுக்காளியம்மன் கோயிலில் இன்று முன்னாள் அரசு ஊழியர் உலகநாதன் என்பவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார். இது சம்மந்தமாக அவரின் உடல் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்கொலைக்கு காரணமாக அவர் எழுதிய தற்கொலைக்கடிதம் கிடைத்துள்ளது. அதில் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆகவேண்டும் என்று வேண்டிக்கொண்டதாகவும், அது நிறைவேறியதால் இப்போது தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.