வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக இப்போது செயல்பட்டு வரும் கைரன் பொல்லார்ட் உலகம் முழுவதும் உள்ள டி 20 தொடர்களில் அதிகளவில் விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டதாக யுடியூபில் ஒரு வீடியோ பரவி அதிர்ச்சியைக் கிளப்பியது. இந்த செய்தி உண்மை என நம்பி அனைவரும் அதைப் பகிர ஆரம்பித்தனர்.