ஒரு இன்ஸ்டா பதிவுக்கு ரூ.14 கோடி.. மெஸ்ஸிக்கு குவியும் செல்வம்!

செவ்வாய், 20 டிசம்பர் 2022 (20:15 IST)
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸி பதிவு செய்யும் ஒரே ஒரு இன்ஸ்டா பதிவுக்கு 14 கோடி ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 
 
ஒரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கு ரூபாய் 14 கோடி மெஸ்ஸிக்கு கிடைக்கும் என இன்ஸ்டாகிராமில் அவர் 40.5 மில்லியன் ரசிகர்கள் அவரைப் பின்தொடர்வது அவருக்கு இந்த தொகை கொடுக்கப்படுகிறது என கூறப்படுகிறது.
 
 2021 ஆம் ஆண்டு மே முதல் 2022 ஆம் ஆண்டு மே வரை மெஸ்ஸியின் வருமானம் மற்றும் சுமார் 1000 கோடி என்று கூறப்படுகிறது. மெஸ்ஸியின் மொத்த சொத்து மதிப்பு 3.5 பில்லியன் டாலர்கள் என்றும் இன்னும் அவரது சொத்து மதிப்பு மிக அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
உலக கோப்பை போட்டியில் நட்சத்திர வீரரான மெஸ்ஸியின் ஒரே ஒரு இன்ஸ்டா பதிவிற்கு 14 கோடி ரூபாய் வருமானம் என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்