ஐபிஎல் முறைகேடு: 45 நாட்கள் காலக்கெடு; பிசிசிஐ-க்கு ரூ.121 கோடி அபராதம்!

வெள்ளி, 1 ஜூன் 2018 (11:58 IST)
இந்தியாவில் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டி தொடர்கல் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை பிசிசிஐ நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த போட்டிகளில் உலகின் பல நாடுகளை சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஏலத்தின் மூலம் வீரர்கள் தங்களது அணிக்கு எடுக்கப்படுகின்றனர். உலக அளவில் அதிக செலவில் நடத்தப்படும் லீக் தொடர் ஐபிஎல் ஆகும்.  
 
இந்நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த 2 வது சீசன் ஐபிஎல் தொடர் தென்னாப்ரிக்காவில் நடத்தப்பட்டது. அப்போது பிசிசிஐ மீது புகார் எழுந்தது. ரூ.243 கோடி வரை பணப்பறிமாற்றத்தில் விதிமீறல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கண்டறிந்தது. 
 
இதனால், தற்போது பிசிசிஐ-க்கு 121 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
ரூ.121 கோடி அபராத பிரிவுகள் பின்வருமாறு... பிசிசிஐக்கு ரூ.82,86 கோடி, முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசனுக்கு ரூ.11.53 கோடி, முன்னாள் ஐபிஎல் தலைவர் லலீத் மோடிக்கு ரூ.10.65 கோடி, முன்னாள் ஐபிஎல் பொருளாளர் பாண்டோவுக்கு ரூ.9.72 கோடி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்