தி.நகர் பெருமாள் கோவிலில் ஐபிஎல் கோப்பைக்கு சிறப்பு பூஜை

செவ்வாய், 29 மே 2018 (14:25 IST)
இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் புத்துணர்ச்சியுடன் மீண்டும் ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரும்பாலும் சீனியர்கள் இருந்ததால் இந்த அணியை சென்னை சீனியர் கிங்ஸ் என்று ஒருசிலர் கேலி செய்தனர். ஆனால் கேலி செய்தவர்கள் வாயடைக்கும் வகையில் கோப்பையை வென்று சாதனை செய்தது சிஎஸ்கே அணி
 
இந்த நிலையில் வெற்றிக்கோப்பையுடன் சென்னை அணியினர் நேற்று சென்னை திரும்பினர். தோனி உள்பட சிஎஸ்கே வீரர்கள் அனைவருக்கும் சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் சென்னை அணியின் உரிமையாளர்கள் குடும்பத்தினர் மற்றும் நிர்வாகிகள் இன்று சென்னை அணி பெற்ற கோப்பையை தி.நகரில் உள்ள பெருமாள் கோவிலுக்கு எடுத்து சென்று சிறப்பு பூஜை செய்தனர். கோப்பைக்கு துளசிமாலையை அணிவித்த பெருமாள் கோவில் பூசாரி சிறப்பு பூஜை செய்து அதன்பின்னர் மீண்டும் கோப்பையை அணி நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். இந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்