சச்சின் சாதனையைத் தகர்க்க காத்திருக்கும் ரோஹித் – தோனி எட்ட இருக்கும் மைல்கல் !

செவ்வாய், 9 ஜூலை 2019 (13:20 IST)
உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற இருக்கும் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன.

உலகக்கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இன்று இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்திய நேரப்படி இந்தப் போட்டி மதியம் 3 மணிக்கு நடக்க இருக்கிறது. இந்தப் போட்டி நடைபெறும் மான்செஸ்டரில் இன்று மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் அறிவித்துள்ளது. போட்டி தொடங்க இன்னும் இரண்டு மணிநேரம் இருக்கும் சூழ்நிலையில் மழை எதுவும் பெய்யவில்லை.

இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணியின் ரோஹித் ஷர்மா 8 போட்டிகளில் 647 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 5 சதங்களும் அடங்கும். இதுவே உலகக்கோப்பைப் போட்டிகளில் ஒரு வீரர் எடுத்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். முதல் இடத்தில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 673 ரன்களோடு உள்ளார். அந்த சாதனையைத் தகர்க்க ரோஹித்துக்கு இன்னும் 27 ரன்களேத் தேவை. அதை இந்தப் போட்டியில் தகர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

அதேப்போல தோனிக்கு இது 350 ஆவது போட்டியாகும் . இந்தியாவில் சச்சினுக்கு அடுத்தபடியாக 350 போட்டிகளில் விளையாடும் இரண்டாவது வீரராகிறார் தோனி. உலக அளவில் இந்த சாதனையை நிகழ்த்தும் 10 ஆவது வீரராவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்