ரோஹித் சர்மா அசத்தல் சதம்.. இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் விபரம்..!

வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (12:57 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் நேற்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியை 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 
 
இதனை அடுத்து இந்திய அணி தற்போது முதல் இன்னிசை விளையாடி வரும் நிலையில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி சதம் அடித்தார்
 
இருப்பினும் கேஎல் ராகுல், புஜாரே, விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இந்த நிலையில் இந்திய அணி சற்று முன் வரை 63 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து 178 ரன் எடுத்துள்ளது என்பதும் ஆஸ்திரேலியா அணியை விட ஒரு ரன் அதிகமாக எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்