இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நாக்பூர் மைதானத்தில் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நிலையில் 177 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. இந்த இன்னிங்ஸில் அஸ்வின் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்கள் எடுத்து கும்ப்ளேவுக்கு பிறகு அந்த சாதனையை படைத்தார்.
அதுமட்டும் இல்லாமல் குறைந்த போட்டிகளில் 450 விக்கெட் என்ற மைல்கல் என்ற கும்ப்ளேவின் சாதனையையும் முறியடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் உலகளவில் முரளிதரனுக்கு பிறகு இந்த சாதனையைப் படைத்த பவுலர் அஸ்வின் என்பதும் குறிப்பிடத்தக்கது. முரளிதரன் 80 போட்டிகளில் எட்டிய மைல்கல்லை, அஸ்வின் 89 போட்டிகளில் எட்டியுள்ளார்.