இந்திய அணிக்காக 46 ஒருநாள், 13 டி20 ஆட்டங்களில் விளையாடியவர் ராபின் உத்தப்பா. இந்திய அணியில் மிகப்பெரிய வீரராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட இவர் ஏனோ தனக்கான இடத்தைப் பெற முடியாமல் தவித்தார். இப்போது 34 வயதாகும் இவர் மீண்டும் அணிக்குத் திரும்பி உலக்கோப்பை போட்டிகளில் விளையாடுவேன் என உறுதியாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் ‘இன்னமும் சாதிக்கவேண்டும் என்ற தீ என்னுள் இருக்கிறது. உலகக் கோப்பைப் போட்டியில் நான் விளையாடுவேன் என நம்பிக்கை உள்ளது. அதற்குக் கடவுளின் ஆசி மற்றும் அதிர்ஷ்டம் முக்கியமானது. உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது எனச் சொல்லவே முடியாது. அப்படி நினைத்தால் நீங்கள் உங்களுக்கே நியாயமாக இல்லை என்று அர்த்தம். இருக்கும் சிறிதளவு வாய்ப்பை நான் எதிர்பார்க்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.