நியுசிலாந்து அணிக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஸ்ரேயாஸ் ஐயர் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை நிகழ்த்தும் 16 ஆவது இந்திய வீரராக பட்டியலில் இணைந்துள்ளார். சதமடித்த அவர் 105 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய டெஸ்ட் அணியின் நடுவரிசை ரஹானேவின் மோசமான ஃபார்மால் ஆட்டம் கண்டுள்ள நிலையில் தனது வாய்ப்பை நியாயப்படுத்தி அணியில் வலுவான அஸ்திவாரத்தை அமைத்துள்ளார் ஸ்ரேயாஸ்.