தன்னை தேர்வு செய்தது சரிதான் என நிரூபித்த ராகுல் திவேட்டியா! விஜய் ஹசாரே கோப்பையில் அதிரடி!

ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (17:20 IST)
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ராகுல் திவேட்டியா இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 போட்டியில் விளையாட தேர்வாகியுள்ளார்.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கவனத்தை ஈர்த்த வீரர்களில் ஒருவர் ராகுல் திவேட்டியா. அதிரடி பிளேயராக கலக்கிய அவர் பந்து வீச்சிலும் கலக்கினார். இதையடுத்து அவர் இப்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 போட்டித் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட அன்றே விஜய் ஹசாரே கோப்பையில் அவர் ஹர்யானா அணிக்காக விளையாடி வரும் அவர் சண்டிகர் அணிக்கு எதிரான போட்டியில் 39 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்து கலக்கியுள்ளார். இதன் மூலம் தன்னை தேர்வு செய்தது சரியே என்று அவர் நிருபித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்