14 வயதில் கேப்டன் ஆன ராகுல் டிராவிட் மகன்: குவியும் வாழ்த்துக்கள்!

வெள்ளி, 20 ஜனவரி 2023 (08:11 IST)
14 வயதில் கேப்டன் ஆன ராகுல் டிராவிட் மகன்: குவியும் வாழ்த்துக்கள்!
இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மகன் 14 வயதில் கர்நாடக மாநில ஜூனியர் அணிக்கு கேப்டன் ஆகியுள்ளார். 
 
ராகுல் டிராவிடுக்கு சமத் மற்றும் அன்வே ஆகிய இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் இருவருமே கர்நாடக அணிக்கு கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்
 
இந்த நிலையில் அன்வே கர்நாடக 14 வயது உட்பட்டோருக்கான அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் பேட்டிங் மட்டுமின்றி கீப்பர் ஆகவும் கர்நாடக அணிக்கு செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஜனவரி 23ஆம் தேதி கேரளாவில் தென்மண்டல ஜூனியர் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்ளும் கர்நாடகா அணிக்கு ராகுல் டிராவிட் மகன் அன்வே கேப்டனாக இருந்து அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்