இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவுக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கும்ப்ளே 2017 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் ரவி சாஸ்தரி பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார். ஆனால் அவருக்கு முன்னதாக பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க சொல்லி ராகுல் டிராவிட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டிருந்த வினோத் ராய் தெரிவித்துளார்.
இதுகுறித்து ‘ராகுல் டிராவிட், தன் மகன்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் என விரும்பியதாக தெரிவித்தார்’ என ராய் தெரிவித்துள்ளார். அப்போது டிராவிட் 19 வயதினருக்கான அணிக்கு பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.