கடநத 1947-ம் ஆண்டு முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்தது. அதையடுத்து 70 ஆண்டு காலமாக அவ்வபோது இந்திய அணி சென்று விளையாடி வருகிறது. ஆனால் இந்திய அணி அங்கு ஒருமுறை கூட ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. கவாஸ்கர்,கபில்தேவ், கங்குலி, தோனி என எத்தனையோ தகுதி வாய்ந்த கேப்டன்கள் தலைமையில் சென்றாலும் தொடர் வெற்றி என்பது 71 ஆண்டுகளாக சாத்தியமில்லாமலே இருந்தது. இத்தனை ஆண்டுகால அவப்பெயரை கோஹ்லி தலைமையிலான இளம் வீரர்கள் படை சாதித்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் வீழ்த்திய ஆசியாவின் முதல் அணி எனும் பெருமையை கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சாதித்துள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் கோஹ்லி உடபட முன்வரிசை வீரரகள் அவுட ஆகி ஏமாற்றம் அளித்தாலும், பின்வரிசை வீரர்களின் துணைட்யோடு அணியை மீட்க போராடி சதம் அடித்ததில் இருந்து ஆரம்பித்தது இந்திய அணியின் வெற்றிக்கான சிறு பொறி. அந்த சிறுபொறியை ஊதிபெருக்கிப் பெரும் காட்டுத் தீயாக்கி இந்திய ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கினார் புஜாரா.