இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹ்ன் இப்போது வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். எப்போதும் சமூகவலைதளங்களில் இந்திய அணியையும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியையும் கேலி செய்து விமர்சனங்கள் வைத்து வருகிறார்.
இந்நிலையில் இவர் ஆசிய வீரர்கள் மீது நிறவெறியோடு நடந்துகொண்டதாக இங்கிலாந்து உள்ளூர் அணியான யார்க்ஷயர் அணியின் வீரர் அஜீம் ரஃபிக் குற்றம் சாட்டியுள்ளார். இவர் மைக்கேல் வான் தலைமையில் யார்க்ஷயர் அணிக்காக விளையாடி இருக்கிறார். அப்போது அஜீமோடு சேர்த்து பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர்கள் அனைவரையும் அவர் நிறவெறி கொண்டு பேசி இழிவு செய்ததாக அஜிம் குற்றம் சாட்டியுள்ளார். ரபீக்கின் இந்த குற்றச்சாட்டை இங்கிலாந்து வீரர் அதில் ரஷீத்தும் உறுதி செய்துள்ளார்.
மேலும் அஜீம் ரஃபீக் அந்த அணிக்காக விளையாடிய புஜாராவும் நிறவெறியால் பாதிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். அவரின் பெயரைன் முதல் பகுதியை அழைக்க முடியவில்லை என்பதற்காக ஸ்டீவ் என அணி நிர்வாகத்தினர் அழைத்தனர். ஆனால் அது கூட நிறவெறி காரணமாகதான். வெள்ளையர் அல்லாத மற்றும் ஆசிய வீரர்களை ஸ்டீவ் மற்றும் கெவின் என சொல்லி அழைப்பார்கள். ஆனால் அது நமக்கே தெரியாது எனக் கூறியுள்ளார்.