உலக கோப்பையில் போர்ச்சுக்கல்; களமிறங்கும் ரொனால்டோ! – ரசிகர்கள் கொண்டாட்டம்!

புதன், 30 மார்ச் 2022 (10:16 IST)
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட போர்ச்சுக்கல் தகுதி பெற்றுள்ளது.

ஃபிஃபா உலககோப்பை கால்பந்து போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிலையில் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் போட்டியாக இது உள்ளது.

இந்த ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 21ம் தேதி தொடங்க உள்ளது. உலகக்கோப்பையில் போட்டியிடுவதற்கான நாடுகளின் தகுதி சுற்று நடந்து வரும் நிலையில் தகுதி சுற்றில் வென்று உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது போர்ச்சுக்கல் அணி.

போர்ச்சுக்கல் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 5வது முறையாக ஃபிஃபா உலகக்கோப்பை போட்டியில் காலெடுத்து வைக்கிறார். இதுவரை ஒருமுறை கூட போர்ச்சுகல் சாம்பியன் பட்டம் வெல்லாத நிலையில் இந்த முறை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்