விராத்கோஹ்லி-அனுஷ்கா ஷர்மா வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

வெள்ளி, 22 டிசம்பர் 2017 (01:09 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத்கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா திருமணம் சமீபத்தில் இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்

இந்த நிலையில் திருமணம் முடிந்த கையோடு தேனிலவு சென்ற விராத்-அனுஷ்கா தம்பதியினர் சமீபத்தில் நாடு திரும்பி, பின்னர் பாரத பிரதமர் மோடியை சந்தித்து ஆசி பெற்றனர்

இந்த நிலையில் நேற்றிரவு டெல்லியில் உள்ள தாஜ் ஓட்டலில் விராத்-அனுஷ்காவின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் முன்னாள் கேப்டன் கபில்தேவ், யுவராஜ் சிங், கவுதம் காம்பீர், சுரேஷ் ரெய்னா, சேவாக் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிரபல பாடகர் குர்தஸ் மான் அவர்களின் இசைக்கச்சேரியும் நடைபெற்றது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்