வீரர்களை தனிமைப்படுத்தும் ஐபிஎல் அணிகள் – விரைவில் கொரோனா சோதனை!

வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (18:20 IST)
ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ள செல்லவுள்ள வீரர்களை அணி நிர்வாகம் தனிமைப்படுத்தி கொரோனா சோதனை மேற்கொள்ள இருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தள்ளிப்போன ஐபிஎல் போட்டிகள் ஒருவழியாக செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை நடக்க இருப்பதாக பிசிசிஐ கடந்த வாரம் அறிவித்தது. ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் சற்றுமுன் அளித்த பேட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனம் நவம்பர் 10 ஆம் தேதி இறுதிப்போட்டி வருமாறு போட்டிகளை நடத்த விரும்புகிறதாம். அதனால் ஐபிஎல் போட்டிகளில் சில மாற்றங்கள் வரலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் மாற்றப்பட்ட அட்டவணை வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் இப்போது மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடர் நடத்த பிசிசிஐக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. விரைவில் எழுத்துப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அமீரகத்துக்கு செல்ல இருக்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள் வர்ணனையாளர்களை தனிமைப்படுத்தி கொரோனா சோதனை மேற்கொள்ளும் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்காக முக்கிய நகரங்களில் கொரோனா சோதனை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. வீரகள் 20 ஆம் தேதிக்கு மேல் விமானம் மூலம் அழைத்து செல்லப்படுவார்கள் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்