ஒரு விக்கெட்டை கையில் வைத்து டிரா செய்த பாகிஸ்தான்: நியூசிலாந்து ஏமாற்றம்!

வெள்ளி, 6 ஜனவரி 2023 (20:37 IST)
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரே ஒரு விக்கெட்டை கையில் வைத்து பாகிஸ்தான் அணி போராடி டிரா செய்துள்ளது
 
ஜனவரி இரண்டாம் தேதி ஆரம்பித்த நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 449 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் 277 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 
 
இதனையடுத்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 408 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2-வது இன்னிங்சில் களமிறங்கியது.
 
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி 304 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து இந்த போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது 
 
இன்னும் ஒரே ஒரு விக்கெட்டை எடுத்திருந்தால் நியூசிலாந்தும் இன்னும் 15 ரன்கள் எடுத்திருந்தால் பாகிஸ்தானும் வெற்றி பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்