ஒலிம்பிக் வீராங்கனையை துணை கலெக்டர் ஆக்கிய சந்திரபாபு நாயுடு

வெள்ளி, 28 ஜூலை 2017 (05:20 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பேட்மிண்ட வீராங்கனை பி.வி.சிந்து பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் சிந்துவுக்கு ஆந்திர அரசும், தெலுங்கானா அரசும், மத்திய அரசும் போட்டி போட்டு கோடிக்கணக்கான ரூபாய் பரிசுகள் கொடுத்து கெளரவித்தது. இந்த நிலையில் சிந்துவுக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் துணை கலெக்டர் பணி வழங்கப்படும் என்று ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு ஏற்கனவே அறிவித்து இருந்தார்.



 
 
தற்போது ஆந்திர அரசு சொன்னபடியே பி.வி.சிந்துவுக்கு அந்த பதவியை வழங்கியுள்ளது.  தனது பெற்றோருடன் தலைமை செயலகத்துக்கு சென்று முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்த அவருக்கு துணை கலெக்டர் பணி நியமனத்துக்கான அரசு ஆணையை முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு வழங்கினார். 
 
இந்த பணியில் பி.வி.சிந்து 30 நாட்களில் பணியில் சேருமாறு அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பி.வி.சிந்து செய்தியாளர்களிடம் கூறியபோது, 'தற்போது பேட்மிண்டன் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்துவேன். உலக போட்டிக்கு தயாராகி வருகிறேன்’ என்று தெரிவித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்