’இப்ப முடிஞ்சா தடுங்க பாப்போம்!’ – ஆஸ்திரேலியாவிற்குள் நுழையும் ஜோகோவிச்!

செவ்வாய், 15 நவம்பர் 2022 (16:17 IST)
கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகாக வந்த ஜோகோவிச் விமான நிலையத்திலேயே தடுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அவர் ஆஸ்திரேலியா வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டென்னிஸ் விளையாட்டில் உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்களை கொண்டவர் செர்பியா நாட்டு வீரர் நோவக் ஜோகோவிச். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியே ஓபன் டென்னிஸில் விளையாட ஜோகோவிச் ஆஸ்திரேலியா சென்றார்.

அப்போது கொரோனா பரவல் இருந்ததால் ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜோகோவிச் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்துவிட்டார். இதனால் 3 நாட்கள் ஜோகோவிச்சை விமான நிலையத்திலேயே நிறுத்தி வைத்திருந்த ஆஸ்திரேலிய அரசு அவரை உள்ளே விடாமல் திருப்பி அனுப்பியது.

ALSO READ: சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் அறிமுகமான நாள் இன்று!

2023 ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடங்க உள்ள நிலையில் கொரோனா குறைந்துள்ளதால் கடந்த ஜூலை மாதமே தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்பை ஆஸ்திரேலிய அரசு திரும்ப பெற்றுவிட்டது. இதனால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் கலந்து கொள்ள ஜோகோவிச்சுக்கு விசா வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தடுப்பூசி போடாததால் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜோகோவிச் ஒரு ஆண்டு கழித்து தடுப்பூசி போடாமலே மீண்டும் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்