மளமளவென விழுந்த நியூசிலாந்து விக்கெட்டுக்கள்! அக்சர் பட்டேல் அசத்தல்!

சனி, 27 நவம்பர் 2021 (15:05 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கான்பூரில் முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 345 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் 2வது இன்னிங்சை விளையாடி வரும் நியூசிலாந்து அணி 150 ரன்கள் வரை விக்கெட் இழக்காமல் இருந்த நிலையில் தற்போது 264 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவின் அக்சர் பட்டேல் மிக அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது நியூசிலாந்து அணி 80 ரன்கள் பின்தங்கி விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்