உலகக்கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இன்று இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்திய நேரப்படி இந்தப் போட்டி மதியம் 3 மணிக்கு நடக்க இருக்கிறது. இந்தப் போட்டி நடைபெறும் மான்செஸ்டரில் இன்று மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் அறிவித்தாலும் போட்டிக் குறித்த நேரத்தில் தொடங்கியுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பேட் செய்து வருகிறது. இன்னிங்ஸின் முதல் பந்தை வீசினார் புவனேஷ் குமார் அது மார்டின் கப்திலின் காலில் பட எல்பிடபுள்யூ கேட்டனர் இந்திய அணியினர். ஆனால் நடுவர் மறுக்கவே புவியின் அழுத்தத்தால் கோஹ்லி ரிவ்யூ கேட்க ரீப்ளேயில் பந்து ஸ்டம்ப்புக்கு வெளியே செல்ல நாட் அவுட் ஆனது. அதனால் இந்திய அணி முதல் பந்திலேயெ டிஆர்எஸ் வாய்ப்பை இழந்தது.