ஈட்டி எறிதல் தரவரிசை… உலகளவில் இரண்டாம் இடத்தில் நீரஜ் சோப்ரா!

வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (16:31 IST)
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நிலையில் ஆகஸ்டு 7ம் தேதியை ஈட்டி எறிதல் தினமாக அறிவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

டோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஜாவ்லின் த்ரோ விளையாட்டில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடி தந்தார். அதை தொடர்ந்து நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், பொதுமக்கள் பலரும் இதை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற ஆகஸ்டு 7ம் தேதியை ”ஈட்டி எறிதல்” நாளாக கொண்டாட இந்திய தடகள சம்மௌனம்  முடிவு செய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் உலகத் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஜெர்மன் வீரர் ஜோஹன்னாஸ் வெட்டர் 1,396 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு இடத்தில் நீரஜ் சோப்ரா 1,315 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்