காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்! – காங்கிரஸ் கட்சியினர் கண்டனம்!

வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (10:16 IST)
சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்தியாவில் சமூக வலைதளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ட்விட்டர் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டதாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மற்றும் மாணிக்கம் தாகூர் போன்றவர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது.

மத்திய அரசின் தூண்டுதலின் பேரில் காங்கிரஸ் கட்சியினர் கணக்குகள் முடக்கப்படுவதாக காங்கிரஸார் பலர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கே முடக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் முடக்கப்பட்டதாக ட்விட்டர் விளக்கம் அளித்துள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்