ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். டெத் ஓவர்களில் யார்க்கர்களாக வீசி இந்த சீசனில் உலகின் சிறந்த வீரர்களான கோலி, டிவில்லியர்ஸ், தோனி உள்ளிட்ட பல வீரர்களின் விக்கெட்களை கைப்பற்றியுள்ளார் நடராஜன். இதையடுத்து இந்திய அணியில் இடம்பிடித்த நடராஜன் மூன்றாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கி 2 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார். அதன் பின்னர் நடந்த 3 டி 20 போட்டிகளிலும் விளையாடி 6 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் நடராஜனின் சிறப்பான பங்களிப்பு குறித்து பேசியுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பூம்ரா மற்றும் ஷமி இல்லாத நிலையில் நடராஜன் சிறப்பாக பந்துவீசினார். அவர் மிக தேர்ந்தவராக, கடின உழைப்பு மற்றும் பணிவு கொண்டவராகவும் இருக்கிறார். இடது கை வேகப் பந்து வீச்சாளர் எப்போதுமே அணிக்கு தேவையான ஒருவர்தான். உலகக்கோப்பை தொடருக்கு நடராஜன் எங்களுக்கு கிடைத்துள்ள சொத்து எனக் கூறியுள்ளார்.