150 அடி உயரத்திலிருந்து வீசப்பட்ட பந்தை பிடித்து நாசர் ஹுசைன் கின்னஸ் சாதனை

புதன், 6 ஜூலை 2016 (14:08 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரான நாசர் ஹுசைன் 150 அடி உயரத்திலிருந்து வீசப்பட்ட பந்தை பிடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.


 

1999-2003 ஆம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்தவர் நாசர் ஹுசைன், கின்னஸ் சாதனைக்காக அவருக்கு மூன்று வாய்ப்பு அளிக்கப்பட்டது, அவருக்கான பந்து 150 அடி உயரத்தில் ஹெலிகாப்டரிலிருந்து வீசப்பட்டது. முதல் வாய்பிலேயே மிக சாதுர்யமாக பந்தை பிடித்து அனைவரையும் வியப்படைய செய்தார் நாசர் ஹுசன்.

இது குறித்து நாசர் ஹுசைன் கூறுகையில் “பந்தை பிடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை, முயற்ச்சி செய்து பார்க்கலாம் என்று தான் களம் இறங்கினேன், பந்தை பிடித்துவிடேன் மிக சந்தோஷமாக இருக்கிறது.” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்