மகளிர் ஐபிஎல்: டெல்லி அணி அபார வெற்றி..!

ஞாயிறு, 5 மார்ச் 2023 (20:41 IST)
மகளிர் ஐபிஎல் போட்டியில் இன்று டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே விறுவிறுப்பான போட்டி நடைபெற்று வரும் நிலையில் இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 223 ரன்கள் எடுத்துள்ளது. 
 
தொடக்க ஆட்ட வீராங்கனைகளான லானிங் 72 ரன்களும் வர்மா 84 ரன்களும் எடுத்துள்ளனர். மேலும் மரிஜானா காப் 17 பந்துகளில் 39 ரன்களும் ஜமிமா 15 பந்துகளில் 22 ரன்கள் அடித்துள்ளனர்.  பெங்களூர் அணியை பொருத்தவரை ஹீதர் நைட் என்பவர் மட்டுமே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் 224 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பெங்களூர் அணி பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்ததால் டெல்லி அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்