தற்போது நடைபெற்று வரும் தொடரின் பெயரை டெண்டுல்கர் –குக் கோப்பை என மாற்ற வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார். இருவரும் தங்கள் நாட்டுக்காக அதிக ரன்கள் எடுத்து சாதித்துள்ளதால் அவ்வாறு பெயர் மாற்றம் செய்ய சொல்லியுள்ளார். இந்த கோப்பை தற்போது ஆண்டனி டெ மெல்லோ கோப்பை என்று அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.