பட்ஜெட் விலையில் இந்தியா வருகிறது ரெட்மி நோட் 10! – வெளியாகும் தேதி அறிவிப்பு!

வியாழன், 11 பிப்ரவரி 2021 (11:37 IST)
ரெட்மி நிறுவனத்தின் நோட் 10 மாடல் மொபைல்கள் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம் என பேசிக்கொள்ளப்பட்ட நிலையில் வெளியாகும் மாதம் குறித்த விவரத்தை ரெட்மி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் பரவலான விற்பனையையும் வரவேற்பையும் பெற்றுள்ள நிலையில் கடந்த ரெட்மி நோட் வரிசையில் ரெட்மி நோட் 9, நோட் 9 ப்ரோ, நோட் 9 பவர் ஆகிய மாடல்கள் வெளியாகின. 6000எம்ஏஹெச் பேட்டரி கொண்ட பவர் மாடல்கள் இந்தியா முழுவதும் நல்ல விற்பனையை கண்டுள்ளன.

இந்நிலையில் இந்த ஆண்டில் ரெட்மி நோட் 10 மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 64 எம்பி பிரைமரி சென்சார் கேமரா, குவார் கேமரா வசதியுடன் 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் வசதிகளுடன் 64ஜிபி, 128 ஜிபி ஆகிய உள்ளடக்க மெமரி வசதிகளுடன் இந்த மாடல் வெளியாக உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த மாதமே இந்த மாடல் மொபைல்கள் இந்திய சந்தைக்கு வர உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்