போட்டிக்கு பின்னர் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆலோசகர் மேத்யூ ஹைடன், ஆஸ்திரேலியாவுடனான அரையிறுதி ஆட்டத்துக்கு முந்தைய தினம் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார் என தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் நுரையீரல் பாதிப்புக்கு சிகிச்சையில் அவர் இருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு உள்ளார் ரிஸ்வான். அதில் மூச்சு விட மிகவும் சிரமப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். உடனடியாக எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்னும் 20 நிமிடங்கள் தாமதமாக வந்திருந்தால் மூச்சுக்குழாயே வெடித்திருக்கும் என செவிலியர்கள் கூறினர் என்று கூறியுள்ளார்.