ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி நாளை மறுநாள் முதல் தொடங்கும் 4 போட்டிகள கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் கோலி 3 போட்டிகளில் இருக்க மாட்டார் என்பது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதே சமயம் ஆஸி அணி பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் தங்கள் முழு பலத்தோடு களமிறங்க உள்ளது.