நெய்மரின் நடிப்பு நல்லதல்ல: மெக்‌சிகோ பயிற்சியாளர் காட்டம்!

செவ்வாய், 3 ஜூலை 2018 (18:12 IST)
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெரிது எதிர்ப்பார்க்கப்பட்ட அணிகள் போட்டியை விட்டு வெளியேறியுள்ளன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் பிரேசில் அணி மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றது.
 
இது குறித்து மெக்சிகோ அணி பயிற்சியாளர் பின்வருமாறு பேசியுள்ளார். நெய்மரின் இந்த நடிப்பு கால்பந்தாட்டத்துக்கு நல்லதல்ல. இது கால்பந்தாட்டத்துக்கு அவமானம். அந்த ஒரு வீரரால் நாங்கள் நிறைய நேரங்களை இழந்தோம். 
 
கால்பந்தாட்டம் ஆழ்ந்து சிந்தித்து விளையாட வேண்டிய விளையாட்டு. எல்லா மக்களும், குழந்தைகளும் பார்க்கும் ஆட்டத்தில் நடிப்பு இருக்கக் கூடாது. நெய்மரால் எங்களது ஆட்ட வேகத்தில் தாக்கம் ஏற்பட்டது. நேற்றைய ஆட்டம் முழுவதும் பிரேசிலுக்கு சாதகமாக இருந்தது என தெரிவித்தார். 
 
நேற்றைய ஆட்டத்தின் போது பிரேசில் வீரர் நெய்மர் மெக்சிகோ வீரர்களின் தடுப்பாட்டத்தால் கீழே விழுந்து வலியால் துடித்தார். எனினும் நெய்மரின் இந்த செயல் சற்று மிகைப்படுத்தும் வகையில் இருந்ததாக சமூக வலைதளங்களிலும் விமர்சனம் எழுந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்