ஒய்வை அறிவித்தார் லியோனல் மெஸ்ஸி!!

புதன், 14 டிசம்பர் 2022 (11:28 IST)
ஃபிஃபா உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியோடு ஓய்வு பெறப்போவதாக லியோனல் மெஸ்ஸி உறுதிப்படுத்தினார்.


உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று அதிகாலை நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையிலான போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றிற்கு தகுதி பெற்றது. 

இந்நிலையில் ஃபிஃபா உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியோடு அதாவது டிசம்பர் 18 ஆம் தேதி ஓய்வு பெறப்போவதாக லியோனல் மெஸ்ஸி உறுதிப்படுத்தினார். அர்ஜெண்டினா அணியின் கேப்டனும் நட்சத்திர வீரரூமான மெஸ்ஸி இன்றைய போட்டியில் கடைசியில் அடித்த கோல் மூலம் அணியை இறுதிச்சுற்றுக்கு கொண்டு சென்றதோடு அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மெஸ்ஸி 11 கோல்கள் அடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, இந்த இடத்தை அடைய முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனது கடைசி ஆட்டத்தை இறுதிப் போட்டியில் விளையாடுவதன் மூலம் எனது உலகக் கோப்பை பயணத்தை முடிக்கிறேன். அடுத்தவருக்கு பல ஆண்டுகள் ஆகும், என்னால் அதைச் செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை. மேலும் இப்படி முடிப்பதே சிறந்தது என்று கூறினார்.

35 வயதான மெஸ்ஸி தனது ஐந்தாவது உலகக் கோப்பையில் விளையாடி, டியாகோ மரடோனா மற்றும் ஜேவியர் மஷெரானோ ஆகியோரை விஞ்சினார் என்பது கூடுதல் தகவல்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்