இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்: குத்துச்சண்டையில் லவ்லினா அரையிறுதிக்கு தகுதி!

வெள்ளி, 30 ஜூலை 2021 (09:34 IST)
இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்: குத்துச்சண்டையில் லவ்லினா அரையிறுதிக்கு தகுதி!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு ஏற்கனவே வெள்ளிப் பதக்கம் பெற்று கொடுத்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
இந்தியாவை சேர்ந்த பாக்ஸிங் வீராங்கனை லவ்லினா இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இதனை அடுத்து அவர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்
 
மகளிர் 69 கிலோ எடைப் பிரிவில் அவர் சீன வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அரையிறுதியில் தோல்வி அடைந்தாலும் வெற்றி அடைந்தாலும் அவருக்கு பதக்கம் உறுதி என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்தியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். லவ்லினாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  லவ்லினா அரைஇறுதியிலும் இறுதியிலும் வென்று தங்கம் வெல்ல வாழ்த்துக்கள் என அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்