இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான நேற்று கொச்சியில் நடந்த டி 20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 171 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் 18 ஓவர்களில் இலக்கை எளிதாக எட்டியது. முதல் 5 ஓவர்கள் வரை இந்திய பவுலர்கள் ஆதிக்கம் செலுத்திய அதன் பின்னர் ரன்களைக் கொடுக்க ஆரம்பித்தனர். ஆட்டத்தின் திருப்புமுனையாக நான்காவது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் விட்ட இரண்டு கேட்ச்கள் அமைந்தன. அதன் பிறகுதான் ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் கட்டுப்பாட்டுக்குள் சென்றது.
இந்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்துப் பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி ‘இப்படி மோசமாக பீல்டிங் செய்தால் எவ்வளவு ரன்கள் அடித்தாலும் அது அதிக ரன்கள் அடித்ததாக கணக்கில் கொள்ள முடியாது. தவறவிடப்பட்ட இரண்டு கேட்சகளும் பிடிக்கப்பட்டு ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்களை இழந்திருந்தால் வெஸ்ட் இண்டீஸுக்கு அது மிகப்பெரிய பின்னடைவாக இருந்திருக்கும். கிடைத்த வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர்.’ எனக் கூறினார்.