இது குறித்து கோலி, கூறியதாவது தோனி கொடுத்த ஐடியாக்கள் பல நேரங்களில் சிறப்பாக பலன் தந்துள்ளது. அனுபவ வீரர்கள் அணியில் இருப்பது பலமே. முந்தைய போட்டியில் பார்ட்டைம் பவுலர்களை பயன்படுத்துவது குறித்து தோனியிடம் ஆலோசித்தேன்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கூட, ஃபீல்டரை ஸ்லிப்பில் நிறுத்துவதா வேண்டாமா, இந்த ஃபீல்டிங் செட்அப் திருப்தியாக உள்ளதா என்பது குறித்தெல்லாம் தோனியிடம் ஆலோசனை பெற்றேன் என கூறியுள்ளார்.