சேப்பாக்கம் ஆடுகளம் சுழல்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி 3 சுழல்பந்து வீச்சாளர்களோடு களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதைப் போலவே அஸ்வின், சபாஷ் நதீம் மற்றும் வாஷிங்க்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஓராண்டாக விளையாடாத இஷாந்த் ஷர்மா அணிக்குள் வந்துள்ளதால் ஆஸியில் சிறப்பாக செயல்பட்ட சிராஜுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.