தமிழ் தலைவாஸ் அம்பாசிடர் ஆகிறார் கமல்ஹாசன்

புதன், 19 ஜூலை 2017 (01:30 IST)
தமிழ் தலைவாஸ் கபடி அணியின் அம்பாசிடராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழ் தலைவாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:



 
 
ப்ரோ கபடி லீகின் 5வது சீசனுக்கு பத்மபூஷன் டாக்டர் கமல்ஹாசன் அவர்களை பிராண்ட் அம்பாஸடராக அரிவிப்பதில் பெருமை கொள்கிறது தமிழ் தலைவாஸ். தனது நிகரில்லாத அனுபவங்களின் மூலம் எங்கள் வீரர்களை ஊக்குவிக்கும் உந்துசக்தியாக அவர் திகழ்வார் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். எங்களது இந்த பயணத்தில் அவரும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்
 
திரு கமல்ஹாசன் அவர்களை பற்றி திரு நிம்மகட பிரசாத் அவர்கள் கூறுகையில், 'பல சவாலான தருணங்களில் திரு கமல்ஹாசன் அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் தன்னடக்கத்தை கண்டு நான் வியந்திருக்கின்றேன். அவரை தமிழ் தலைவாஸ் அணியின் பிராண்ட் அம்பாஸிடராக அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுத்தோம். ஸ்போர்ட்ஸ் மீது அவருக்கு இருக்கும் ஈடுபாடு அவரது படங்களில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் தெரிகிறது. நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் கலைத்துறையில் பல சாதனைகள் புரிந்துள்ள அவரது தமிழ் பற்று அனைவரும் அறிந்ததே
 
வாழக்கையின் போராட்டங்களை புன்னகையுடன் எதிர்கொள்ளும் திரு கமல்ஹாசன், கபடி யுத்த களத்தில் எங்களது வீரர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பார்.
 
தமிழ் தலைவாஸுடன் இணைவதைப்பற்றி கமல்ஹாசன் கூறுகையில், 'கபடி விளையாட்டுடன் இணைவதில் பெருமிதம் கொள்கிறேன். நமது முன்னோர்களின் வழிவந்த விளையாட்டில் எனக்கும் ஒரு பங்கு இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் தலைவாஸ் அணியின் பிராண்ட் அம்பாஸிடராக் தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமை கொள்கிறேன். என் அருமை தலைவாஸ், உங்கள் மனதில் பெருமை பொங்க, கோட்டை தாண்டி புகழை சூடிடிங்கள்
 

வெப்துனியாவைப் படிக்கவும்