பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் கே எல் ராகுல். ஆனால் திடீரென நேற்றைய போட்டியில் அவர் விளையாடாமல் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு குடல் பகுதியில் ஒரு அறுவை சிகிச்சை செய்யபப்ட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.