இங்கிலாந்து செல்லும் இந்திய அணிக்கு தனிமைப்படுத்துதல் காலம் தொடங்கியுள்ளது. மொத்தம் 24 நாட்கள் பயோபபுளில் இருந்து அவர்கள் அடிக்கடி கொரோனா சோதனை செய்யப்பட உள்ளனர். இந்நிலையில் உடல்தகுதி பிரச்சனைகளால் அணியில் இணையாமல் இருந்த கே எல் ராகுலும், மயங்க் அகர்வாலும் இப்போது தங்கள் உடல்தகுதியை நிருபித்து அணியினருடன் இணைய உள்ளனர். இதற்காக அவர்கள் தனி விமானத்தில் மும்பை சென்றுள்ளனர். இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கும் வீரர்களும் இதுபோல தனி விமானங்களில் மும்பை பூனேவில் முகாமிட்டுள்ளனர்.