கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் மீண்டவர்கள் தடுப்பூசி எப்போது போட்டுக்கொள்வது என்ற கேள்வி எழுந்தது. இதற்கு முதலில் 6 மாத கால அளவை நிபுணர் குழு தெரிவித்திருந்தது. ஆனால் அது நீண்ட இடைவெளி என்பதால் தற்போது 3 மாதத்துக்குப் பின் போட்டுக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.